தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த இளம் தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம்

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த இளம் தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம்
  • :

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில் பிரதான நோக்கமான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக இளையோரை வலுப்படுத்துவதில் பணியாற்றும் இளைஞர் யுவதிகள் குழுவொன்று அண்மையில் (22) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.

பாராளுமன்ற அமர்வுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவாக்க நடைமுறைகளுக்கும், தேர்தல் நடைமுறைக்கும் இடையிலான தொடர்பு மூலம் ஜனநாயகம் எவ்வாறு மேம்படுத்தப்படுகின்றது என்பதையும் ஆராய்வதற்கு அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்புக் கிடைத்தது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் விழிப்புணர்வூட்டும் செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு நிகழ்ச்சியாக அமைந்தது.

Related Articles