கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அனுசரணையில் நிறுவப்பட்ட சிறுவர் புத்தகங்கள் குறித்த தேசிய மாநாட்டால் தொகுக்கப்பட்ட"Fiction Wonderland : A Comprehensive Guide to Creating Children's Fiction Books" என்ற சிறுவர் புனைக்கதை புத்தகங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டியின் வெளியீடு, 27வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், சிரேஷ்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மேற்கோள் காட்டி, எங்களிடம் சிறந்த சிறுவர் இலக்கியம் இருப்பதாகவும், இந்த வழிகாட்டல் எதிர்காலத்தில் வளரும் எழுத்தாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.


