"சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
  • :

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 5 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, ஒரு உத்தியோகபூர்வ நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தில் தூதுவர்கள், சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Related Articles