சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கபட உள்ளார்

  • :
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையின் சுகாதார சேவை கட்டமைப்பில் நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் வழங்கவும் அந்தச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் குறைப்பதையும், நோக்கமாகக் கொண்டு, மாவட்ட அளவில் சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

 அதன்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய "மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள்" ஆக ஒரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

மத்திய அரசுக்கும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார சேவை நிறுவனங்களுக்கும் இடையே தற்போதுள்ள ஒருங்கிணைப்புக் குறைபாடுகளைக் களைவதன் மூலம், மேலும் திறமையான சேவைகளை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும். மேலும், முந்தைய அமைப்பின் கீழ், உள்ளூர் மட்டத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை முறையாகக் கண்டறிவதிலும், அவற்றை தேசியத் திட்டங்களில் இணைப்பதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.
 
இவ்வாறு நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட பணிகள் மற்றும் பொறுப்புகளும் முன்மொழியப்பட்டுள்ளன, அவையாவன.
•மாவட்ட அளவில் சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து, பொதுமக்களின் பங்கேற்புக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்தல்,
•அந்தத் தேவைகளைத் தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க உதவுதல்,
• வளங்களின் திறமையான பயன்பாட்டையும், துறைசார் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துதல்,
•அமைச்சகக் கொள்கைகளுக்கு இணங்க பிராந்திய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைத்தல்,
•முன்னுரிமைத் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தல்,
 
•தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை வெற்றிகரமாக முடிக்க உதவுதல், மற்றும் பல இதர விடயங்கள்.
இலங்கையின் சுகாதார சேவை அமைப்பானது, துறைசார் அமைச்சகங்களின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களும், மாகாண சபைகளின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களும் என இரட்டை அமைப்பைக் கொண்டுள்ளது.
 
இந்த அமைப்பின் மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டாலும், துறைசார் மற்றும் மாகாண நிர்வாக அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதால், மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு இல்லாமை, வளப் பயன்பாட்டில் திறமையின்மை மற்றும் தேசியத் திட்டங்களில் உள்ளூர் தேவைகளை முழுமையாகப் பிரதிபலிக்கத் தவறுதல் போன்ற சிக்கல்கள் காணப்படுகின்றன என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது தெரிவித்தார். குறிப்பாக, பொதுமக்களின் குறைந்த அளவிலான பங்கேற்பின் காரணமாக, பிராந்திய அளவில் சுகாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பது போதுமான அளவில் செய்யப்படவில்லை என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
 
அதன்படி, பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - சுசந்த குமார நவரத்ன, பதுளை - ரவீந்திர பண்டார, மட்டக்களப்பு - கந்தசாமி பிரபு, கொழும்பு - நஜித் இந்திகா, திகமதுள்ள/அம்பாறை எம். எம். சுகத் ரத்நாயக்க, காலி - நிஷாந்த சமரவீர, கம்பஹா - தர்மப்பிரிய விஜேசிங்க, ஹம்பாந்தோட்டை சதருவன் மதரசிங்க, யாழ்ப்பாணம் -எஸ். ஸ்ரீ பவனந்தராஜ, கேகாளை - ஆர். எம். சமந்த ரணசிங்க, களுத்துறை - கலாநிதி நிஹால் அபேசிங்க, கண்டி - தனுர திஸாநாயக்க, குருநாகல் - கலாநிதி ஜகத் குணவர்தன, மாத்தளை - செல்வி தீப்தி நிரஞ்சனி வாசலகே, மாத்தறை - லால் பிரே மனாத், மொனராகலை - எச்.எம். சரத் குமார, நுவரெலியா, நுவரெலியா - டி. பண்டார, புத்தளம் - கயான் ஜானக, இரத்தினபுரி - கலாநிதி ஜனக சேனாரத்ன, திருகோணமலை - ரொஷான் அக்மீமன, வன்னி - செல்வத்தம்பி திலகநாதன் ஆகியோர் ஆவர்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இந்தப் புதிய முறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது

Related Articles