டிஜிட்டல் வாகனங்களுக்கு காப்புறுதி அட்டைகளை வழங்குதல் தொடர்பாக

  • :
இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையில் உள்ள பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, மோட்டார் வாகனக் காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, 2026 மே 01 முதல் காப்புறுதி நிறுவனங்களால் டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, தேவையான உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளார். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பின்வரும் வடிவங்களில் மோட்டார் வாகனக் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டை
அச்சிடப்பட்ட சான்றிதழ் (காப்புறுதி தாரரின் கோரிக்கையின் பேரில் மாத்திரம்)
காப்புறுதி நிறுவனத்தால் கையடக்கத் தொலைபேசி செயலி (Phone App) மூலம் காப்பீட்டுதாரருக்கு வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டை.

Related Articles