சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இன்று உலக சுகாதார மாநாட்டில் உரை ஆற்றுகிறார்...

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இன்று உலக சுகாதார மாநாட்டில் உரை ஆற்றுகிறார்...
  • :
உலக சுகாதார அமைப்பின் 79வது உலக சுகாதார மாநாட்டின் ஆரம்ப விழா இன்று (18) சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறுகின்றது.

 உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Dr. Tedros Adhanom Ghebreyesus மாநாட்டை உத்தியோகபூர்வ ரீதியாக திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் 194 அங்கத்துவ நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உட்பட பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்கின்றனர்

இம்முறை “One world for Health” எனும் தொனிப் பொருளில் இம்மாநாடு நடைபெற உள்ளது. இத்தலைப்பின் கீழ் உலக சுகாதார சவால்கள், தொற்றுகளுக்கான தயார்படுத்தல்கள் மற்றும் முழு உலக சுகாதாரத்தையும் உள்ளடக்கியதாக பரந்த கலந்துரையாடல் இங்கு நடைபெற உள்ளது .
உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய வலயங்களின் மாநாட்டின் தலைவர் மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இம்முறை மாநாட்டில்ய்ள்ள் கலந்து கொள்வதுடன் இன்று மாநாட்டில் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Articles