கேகாலை மாவட்ட யடியந்தோட்டை, புலத்கொகுபிடிய, ருவனவெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர் பிரச்சினைக்குத் தீர்வு 

  • :

கேகாலை மாவட்ட யடியந்தோட்டை, புலத்கொகுபிடிய, ருவனவெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர் பிரச்சினைக்குத் தீர்வு 

 ருவனவெல்ல நீர் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் யடியந்தோட்டை, புலத்கொகுபிடிய, ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர் பிரச்சினைக்குத் தீர்வாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தின் தெரிவித்தார்.

இத்திட்டத்தினால் ருவன்வெல்ல, புலிக்கொகுபிடிய மற்றும் யடியந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 36,000 நீர் வசதிகளை வழங்குவதற்குக் கிடைத்தது.

இதன் கீழ் கன்னன்தோட்டை, மேல் கன்னன்தோட்டை மற்றும் பனாபிடிய ஆகிய பிரதேசங்களில் மூன்று நீர்த்தேக்கங்களை நிருமாணித்தல் மற்றும் பனாபிடிய மற்றும் கன்னன்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles