சுகாதார மற்றும் ஊடகத்துறைகளை முன்னேற்றுவதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி

சுகாதார மற்றும் ஊடகத்துறைகளை முன்னேற்றுவதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி
  • :

இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும் என கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) குறிப்பிட்டார்.

இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும் என கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கையின் கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இடையேயான சந்திப்பு அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

 நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைகளில் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மிகவும் நெருக்கமான அரசாங்கமாக கொரிய அரசாங்கம் நாட்டின் திட்டங்களுக்காக பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் கொய்கா (KOICA) மற்றும் கொபிஹ்  (KOFIH) ஆகிய கொரிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பிற்கு ஊடாக இந்த நாட்டின் சுகாதாரத் துறைக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் இதன் போது நினைவுபடுத்தினார்.

அவ்வாறே நாட்டின் ஊடகத்துறை அபிவிருத்திக்காக கொரிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் அமைச்சர் எதிர்பார்த்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கிய இலங்கையின் கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee ) நாட்டின் சுகாதாரத் துறைக்காக கொரிய அரசாங்கம் வழங்கிய ஆதரவை எதிர்காலத்திலும் வழங்குவதற்கு எதிர்பார்க்கும் ஒத்துழைப்புத் தொடர்பாக மிகவும் தெளிவான கருத்துக்களை வழங்கினார். 

நாட்டிற்கு கொரிய அரசாங்கத்தின் கொபிஹ் (KOFIH) நிறுவனத்தின் ஆதரவினால் செயற்படுத்தப்படும் இலங்கையின் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் சேவையை முன்னேற்றும் திட்டம் உட்பட சுகாதாரத் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்த திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அவர் அமைச்சருக்கு எடுத்துக்காட்டினார். 

கொய்கா (KOICA) நிறுவனம் நாட்டிற்கு பல்வேறு துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதுடன் கொபிஹ் (KOFIH) நிறுவனம் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிறுவனம் ஒன்று. 

கடந்த வருடத்தினுள் கொரிய சுற்றுலாப் பயணிகளில் 10,000 இற்கும் அதிகமானவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவ்வாறே சுற்றுலா மேற்கொள்ளும் போது பயண அனுமதிப் பத்திரத் (வீசா) திற்காக கட்டணம் அறவிடப்படுவதாகவும் அதன்போது கொரிய சுற்றுலாப் பயணிகள் அவ்வேளைகளில் வேறு நாடுகளுக்கு சுற்றுலாவிற்காக அனுப்பப்படுவதாகவும் தூதுவரினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர், சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடி, இப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் தருவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, கொரிய தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் குழுவின் பிரதானி ஷோன்கியி ஜங்க் (Sohngyee Jung) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]