நாட்டின் மற்றும் நாட்டைச் சூழவுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் 24 மணித்தியாலமும் அவதானத்துடன் செயல்பட்டு வருகின்றது. எதிர்வரும் நாட்களுக்கான வானிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான முன்னறிவிப்புக்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை மாத்திரம் தொடர்ந்தும் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஊடாக தற்காலத்தில் வெளியாகின்ற நாட்டின் எதிர்கால வானிலை முன்னறிவிப்புக்கள் குறித்த நம்ப தன்மையற்ற செய்திகள் குறித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, வானிலை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் எதிர்கால வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத ளத்தின் https://www.meteo.gov.lk ஊடாக அல்லது முகப்பக்கத்தின் https://www.facebook.com/SLMetDept/ ஊடாக பார்வையிட முடியும்.