‘IMDEX Asia - 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 09 வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் (9th IMSC) பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலானது தீவிலிருந்து புறப்பட்டது

‘IMDEX Asia - 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 09 வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் (9th IMSC) பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலானது தீவிலிருந்து புறப்பட்டது
  • :

சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025 ஏப்ரல் 27 அன்று காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

‘IMDEX - 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி 2025 மே 5 முதல் 8 வரை நடைபெறுவதுடன் இந்தக் கண்காட்சி கடல்சார் பாதுகாப்பில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காண்பிப்பதுடன், மேலும் கண்காட்சியின் இறுதியில் போர்க்கப்பல்களின் கண்காட்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கண்காட்சியுடன் இணைந்து 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் கடல்சார் பாதுகாப்பு நிலப்பரப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடைபெறும். இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படைகள் மற்றும் பல்வேறு கடல்சார் குழுக்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வில் பங்கேற்க இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுர 2025 ஏப்ரல் 27 அன்று தீவிலிருந்து புறப்பட்டது.

இந்தப் பயிற்சியில் பல பிராந்திய மற்றும் பிராந்தியம் சாராத கடற்படைகள் மற்றும் கடல்சார் தரப்பினர் பங்கேற்பதால், இலங்கை கடற்படை பிராந்திய கடற்படைகளுடன் இணைந்து செயல்படக்கூடிய தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், புதிய சவால்களைக் கண்டறிந்து அவற்றிற்கு கூட்டாகத் பதிலளிப்பதன் மூலம் மிகுந்த நன்மைகளை பெறலாம்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]