சமகாலத்தில் எமது நாட்டின் சீனித் தேவையின் 90% வீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்காக குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணி செலவிடப்படுகின்றது.
உள்நாட்டு கரும்பு உற்பத்தியில் நிலவுகின்ற பலவீனங்கள் மற்றும் எதிர்கொள்கின்ற சவால்களை வென்றெடுப்பதற்காக சர்வதேச தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் கரும்பு விளைச்சல் மற்றும் சீனி உற்பத்தியை அதிகரித்தல், பயிற்சி மற்றும் அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் பங்களார்களின் தொழிநுட்ப இயலளவை அதிகரித்தல், பெறுமதி சேர்த்தல் துணை உற்பத்திகளின் வினைத்திறனான பயன்பாட்டை மேம்படுத்தல் மற்றும் சீனி உற்பத்தித் துறையில் நிறுவன ரீதியான இயலளவுகளைப் பலப்படுத்தல் போன்ற பணிகளுக்கு கரும்பு உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கின்ற பிறேசில் நாட்டிடமுள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை இக்கருத்திட்டத்தின் மூலம் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கிடையில் 2008 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ள தொழிநுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தப் பணிச்சட்டகத்தின் கீழ் உத்தேச கருத்திட்டத்தை 36 மாதங்களில் அமுல்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


