தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் - 2026 ஐ முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் பல நடைபவனி மாவட்ட மட்டத்தில்- 2026 தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு "Say No" எனும் தொனிப்பொருளில் நச்சுப் போதை பொருள் எதிர்ப்பு நடைபவனிகள் பல மாவட்ட மட்டங்களில் அண்மையில் (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி அனுராதபுர மாவட்ட இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி கடந்த மே மாதம் 23ஆம் திகதி இளைஞர் தினத்தை முன்னிட்டு மே 23 ஆம் திகதி அனுராதபுர மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் அருகில் ஆரம்பித்து , பன்னிரண்டாம் கடை சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து புதிய பஸ் கரிப்பு நிலையம் வரை இடம்பெற்றது.
கேகாலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நச்சுப்போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி அதே தினம் கேகாலை ஆச்சார மத்திய நிலையத்தின் அருகில் ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறே நச்சுப் போதை பொருள் எதிர்ப்பு பேரணி மாத்தறை நேபே கலாச்சார மத்திய நிலைய சுற்றுவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் காலி மாத்தறை பிரதான வீதி ஊடாக மாத்தறை பஸ் தரிப்பு நிலையத்தை அண்மித்து நிறைவடைந்தது.
தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பதுளை மாவட்ட நச்சுப்போதைப் பொருள் தடுப்பு பேரணி மற்றும் தெளிவுபடுத்தும் நிகழ்வு மே 23ஆம் திகதி பண்டாரவளை நகரை மையப்படுத்தியதாக இடம் பெற்றது.
போதைப்பொருள் பாவனையை சமூகத்தில் இருந்து துரத்தும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த Say No நடைபவனி மற்றும் இளைஞர் பேரணி இதே தினம் கண்டி நகரிலும் நடை பெற்றது
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களையும் மையப்படுத்தியதாக Say No என்ற தொனிப்பொருளில் நச்சுப் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


