திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவற்றை மறுசீரமைக்கும் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் 100,000 அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிதி உதவி இலங்கையின் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதுவர் நீனாபி கைங்கிலெட் இனால் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இடம் கையளிக்கப்பட்டது.


