புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்

புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்
  • :
புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்
அரசாங்க ஊழியர்களின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கு விருத்தியை நோக்காகக் கொண்டு பொது நிருவாக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட "ஸ்கில் அப் கௌ' உத்தியோகபூர்வ youtube அலைவரிசை நேற்று (21) மக்கள் மயப்படுத்தப்பட்டது.
நாரஹேபிட்டியவில் அமைந்துள்ள நிலமதுர கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மாதாந்த முன்னேற்றக் கூட்டத்தை முன்னிட்டு, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
 
அறிவால் நிறைந்த திறமையான அரசாங்க சேவைக்காக நவீன அரச சேவையில் அத்தியாவசியமான தொழில் நுட்ப நடவடிக்கையாக அமைச்சின் ஆளணி வள விருத்திப் பிரிவினால் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்க ஊழியர்களின் தொழில் தகைமையை இற்றைப் படுத்தல், நவீன உலகிற்கு ஏற்றவாறு திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தியை ஏற்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப உபயோகப்படுத்தி பயிற்சித் தேவைகளை வினைத்திறனாக பூர்த்தி செய்தல் ஆகியன பிரதான நோக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைச்சில் கீழ் நிறுவனங்களில் கடந்த மாதத்தில் முன்னேற்றம் போன்ற எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. பொது மக்கள் சேவையை மிகவும் வெளிப்படையாக மற்றும் விரைவாக
 
மேற்கொள்ளும் தேவையை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார உட்பட பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles