உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி
  • :
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அப்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்தல்.

 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், அவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காக விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அப்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 2021.05.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
ஆயினும், குறித்த விதந்துரைகளை பிரயோக ரீதியாக அமுல்படுத்துவதை கண்காணிப்பதற்காக முறைசார்ந்த நிரந்தர பொறிமுறையொன்று இதுவரை தாபிக்கப்படாமையால், குறித்த விதந்துரைகளை அமுல்படுத்துவதன் பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்கு முறையொன்று இல்லை.
 
அதனால், குறித்த விதந்துரைகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட விரிவான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையொன்றை தாபிக்கவேண்டியதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு விடயப்பரப்பு தொடர்பான நிபுணர் ஒருவருடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles