இலங்கையில் மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக 15 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்
தேசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மருத்துவக் கல்வியைப் பலப்படுத்துவதிலுள்ள மூலோபாய முக்கியத்துவத்தை இனங்கண்டு, இலங்கையின் மருத்துவக் கல்வி தொடர்பான விரிவான தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் ஆலோசனைகளுக்கமைய, 15 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய, குறித்த குழுவில் பின்வருவோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1
பேராசிரியர் இந்திக மஹேஷ் கருணாதிலக்க
துணைவேந்தர்,
கொழும்பு பல்கலைக்கழகம் (குழுத் தலைவர்)
2
பேராசிரியர் கோமிந்த பொன்னம்பெரும
தர உறுதிப்பாட்டு நிரந்தரக் குழு,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
3
பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன்
பீடாதிபதி,
மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
4
பேராசிரியர் எம். உமாகாந்த்
துறைத்தலைவர்,
சுகாதார சேவைகள் விஞ்ஞான பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்
5
பேராசிரியர் கே. என். மாரம்பே
துறைத்தலைவர்,
மருத்துவ பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
6
வைத்தியர் சி. எல். கே. அத்தபத்து
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு
7
பேராசிரியர் ஏ. ஏ. பத்திரண
மருத்துவ பீடம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
8
வைத்தியர் பாலித அபேகோன்
ஆலோசகர்,
உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சு
9
பேராசிரியர் எல். எல். அமில இசுரு
துறைத்தலைவர்,
மருத்துவ மற்றும் பிரயோக விஞ்ஞான பீடம், ரஜரட்ட பல்கலைக்கழகம்
10
வைத்தியர் இந்திக வன்னிநாயக்க
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (மருத்துவ சேவைகள்),
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு
11
பேராசிரியர் மனுஜ் வீரசிங்க
மருத்துவ பீடம்,
வயம்ப பல்கலைக்கழகம்
12
வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க
பல் மருத்துவ பீடம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
13
வைத்தியர் சி. கே. லியனகே
மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
(மருத்துவ பீட விரிவுரையாளர் சங்கப் பிரதிநிதி)
14
நவோத்ய மாரசிங்க
மருத்துவ பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
(மருத்துவ பீட மாணவர் சங்கப் பிரதிநிதி)
15
டப்ளியூ. ஆர். பி. யூ. நுவன்தி
உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி),
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
(குழுவின் அழைப்பாளர்)


