இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு
  • :

மதுரங்குளி Ocean food தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ocean star jack mackerel டின் மீன்களை ஏற்றுமதிக்கான கொள்கலன்களில் ஏற்றும் பணி நேற்று (29) தொழிற்சாலை வளாகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும். அதன்படி, இந்த டின் மீன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், புதிய அரசாங்கத்தின் "ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக 2025 மார்ச் மாதம் 29, அன்று டின் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நாளாந்த டின் மீன் நுகர்வு மூன்று இலட்சம் என்றும், ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் டின் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும், அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் டின் மீன் ஏற்றுமதி மூலம் 8 மில்லியன் டொலர்கள் நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒரு கொள்கலனில் 48,000 கேன்கள் உள்ளன. இதனூடாக, 38,000 - 40,000 டொலர் வரை அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும். 

மீனவர்களால் பிடிக்கப்படும் தரமான மீன்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான விசேட திட்டத்தை Ocean food நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி, உள்நாட்டு, மீன்பிடி படகுகளில் பிடிக்கின்ற மீன்களை, Ocean food நிறுவனம், நேரடியாக சென்று இரண்டு நாட்களுக்குள், பெற்று குளிர்பதன கிடங்கில் சேமிக்கப்பட்டு, உடனடியாக தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, மீன் அறுவடைக்குப் பின்னதான சேதங்கள் எதுவும் இல்லை. மீன் அறுவடைக்குப் பின்னதான இழப்புகளைக் குறைப்பது இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான மீன்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இதனூடாக மீனவர்கள் கடலில் அதிக விலையைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் விரைவாக மீண்டும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

இதன் விளைவாக மீன் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு சிறந்த விலை கிடைத்துள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர் குறைந்த விலையில் தரமான டின் மீன்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதாகவும் Ocen food நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது 21 டின் மீன் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், மீன்பிடித் திணைக்களத்தின் தரவுகளில் படி பதிவு செய்யப்பட்ட இரண்டாவது தொழிற்சாலை Ocean food நிறுவனம் என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | editor@news.lk