இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை
  • :

2025 மார்ச் 10 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச் 10 ஆம் திகதி காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Articles