இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய எனினும் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கக்கூடிய வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் வட மாகாணத்தில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களில் சிலவற்றை மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு இணங்க உத்தேசிக்கப்பட்ட புதிய கைத்தொழில் நகரம் ஒன்றுக்காக அவசியமான திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகளுக்காக அண்மையில் (07) மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும, உட்பட்ட குழுவினருடன் வடக்கிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த குழுவினர் வடமாகாணத்தின் காங்கேசந்துறை கைத்தொழில் பூங்கா, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சீமெந்துத் தொழிற்சாலை உட்பட திட்டங்கள் சிலவற்றை மேற்பார்வை செய்தனர்.
புதிய திட்டமாக புதிய உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கும் ஆனையிறவு உப்பளத்தை மேற்பார்வை செய்தல், உத்தேசிக்கப்பட்ட கைத்தொழில் பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள காங்கேசன்துறை , மாங்குளம் மற்றும் பரந்தன் இரசாயன நிறுவனத்திற்கான முதலீட்டை ஆரம்பித்தலுக்காக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் அதிகாரிகளுடன் அவ்விடத்தைக் கண்காணித்தல் ஆகிவற்றிலும் குழுவினர் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் முழுமையாக அழிவடைந்துள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு அண்மையில் (07) புத்துயிரளிக்கக் கூடியதாக இருந்ததுடன் அதன் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் விபரித்தார்.
இதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்கள் பல இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் சகல மக்களும் இலங்கையர்களாக இன மத பேதம் இன்றி நாட்டின் பொருளாதாரத்திற்காக பங்களிக்கக்கூடிய பங்காளியர்களாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் அர்ஜுன ஹேரத், வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.