இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 செப்டம்பர் மாதம் 28 ம் திகதி வானிலை முன்னறிவிப்பு
காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணியளவின் பின்னர் சிறிய மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles