இலங்கை தேயிலைச் மற்றும் கொழும்பு தேயிலை தேயிலை வர்த்தகர்களின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘சிலோன் விசேட தோட்டத் தேயிலை’ வருடாந்த அறக்கட்டளை ஏலம் (Charity Auction), 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானின் ஒஷாக்காவில் இடம் பெற்றது.
இது இலங்கை ஒஷாக்கா உலகக் கண்காட்சியில் (World Expo Osaka) கலந்து கொள்வதை முன்னிட்டு நடைபெற்றது.
2025 சிலோன் விசேட தோட்டத் தேயிலைப் போட்டியில் வெற்றி பெற்ற 27 தேயிலை வகைகள் இந்த ஏலத்திற்காக முன்வைக்கப்பட்டதுடன், நாட்டின் 07 பிரதான தேயிலை உற்பத்தி வலயங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இந்த தேயிலை மொத்த ஏல விற்பனை இடம்பெற்றது.
60க்கும் மேற்பட்ட ஜப்பானிய தேயிலை வாங்குபவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டதுடன், போட்டியில் வெற்றி பெற்று தேயிலையை கொள்வனவு செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டியதுடன் வாங்குபவர்களுக்கு ஏலத்தில் விடும் சகல தேயிலை வகைகளின் தன்மைகளும் பரீட்சிப்பதற்கும், சுவைத்துப் பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன் போது, சப்ரகமுவ வலயத்தில் தங்க விருதை வென்ற, புதிய விதானகந்தே சிலோன் கருப்புத் தேயிலை (FFExSp) இதுவரை சந்தைப்படுத்தப்பட்ட விலை அதிக தேயிலையாக கின்னஸ் உலக சாதனைக்கு உத்தியோகபூர்வமாக நுழைந்தது.
அத்துடன், ஒரு கிலோவிற்காக 125,000/- ஜப்பான் யென் ( 860/- அமெரிக்கா டொலர்) போன்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.


