இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 ஒக்டோபர் மாதம் 11 திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 

2025 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 

 

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணியளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50மில்லி மீட்டரளவில் கடும் மழை பெய்யலாம்.

 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியளவின் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது 

 

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக கடும் காற்றினால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது

 

 #dailynews #newsdotlk #Srilanka #srilankanews #SriLankaNews

Related Articles