பாதுகாக்கப்பட்ட குளங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழா

பாதுகாக்கப்பட்ட குளங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழா
  • :
பாதுகாக்கப்பட்ட குளங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (10) கருவலகஸ்ஸவெவவில் நடைபெற்றது

 யானைகளுக்கு உணவளிக்கும் மண்டலங்களை நிறுவுதல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான குளங்களின் எல்லைகளைக் குறிக்கும் திட்டம் இன்று கருவலகஸ்ஸவெவ தப்போவ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர்வை.ஐ.எம். சில்வா மற்றும் அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இத் திட்டமானது, சுற்றாடல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் சூழலை நேசிக்கும் அனைவரின் ஆதரவுடன் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பங்கேற்புடன் இன்று முதல் மூன்று நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.

Related Articles