2026 வரவு செலவுத் திட்டத்துடன் இணைந்ததாக அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளைத் துரிதமாகவும் செயற்திறனுடனும் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
இன்று பதவிப்பிரமாணம் செய்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்:
1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
2. அநுர கருணாதிலக்க - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
3. வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்:
1. கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
2. டி.பி. சரத் - வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
3. எம்.எம். மொஹம்மட் முனீர் - சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
4. எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
5. வைத்தியர் முதித ஹன்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்
6. அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
7. எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
8. யு.டீ. நிஷாந்த ஜயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
9. கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
10. எம்.ஐ.எம். அர்கம் - வலுசக்தி பிரதி அமைச்சர்
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு


