2025 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (2025 ஏப்ரல் 27ஆம் திகதி) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வெப்பமண்டல ஒருங்கிணைப்பு வலயம் (வடக்கு அரைக்கோளத்தில் மற்றும் தெற்கு அரைக்கோளத்திலிருந்து வரும் காற்று வீசும் பகுதி) தீவின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட - மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.