எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலை:
தீவைச் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று:
தென்மேற்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 100 கி.மீ. (20-30) ஆகும்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கும்.
கடலில் நிலை:
சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாகக் காணப்படும்..
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதியில் உள்ள கடல் பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசலாம் என்பதுடன் அதன் போது அக்கடல் பிரதேசம் தற்காலிகமாக அதிக அலை ஏற்படலாம்.