இரண்டு கலாச்சார நிகழ்வுகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்

இரண்டு கலாச்சார நிகழ்வுகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்
  • :
எதிர்வரும் மே மாதம் 27 முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும்,
28ஆம் திகதி முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருமாளும் 29,30,31 ஆம் திகதி புனித நாட்களில் மிருகங்களை அறுத்து இறைச்சி வழங்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் என இரண்டு கலாச்சார நிகழ்வுகள், எமது நாட்டில் வாழும் இரண்டு வகையான மக்களினால் ஒரே சமயத்தில் கொண்டாடப்படவுள்ளன. இதற்காக இரண்டு கலாச்சார நிகழ்வுகளையும் பிரச்சினைகள் எதுவும் இன்றி நடாத்துவதற்கு, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விசேடமாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக அமைத்து மட்டத்தில் தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்க முடியும். இதனால் வீணான முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி அவசியம் இல்லை. கலாச்சார அடையாளங்களுக்கு கௌரவம் அளித்து, எவருக்கும் அழுத்தங்கள் பாதிப்புகள் ஏற்படாதவாறு, இந்த கலாச்சார அடையாளங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
 
அதன்படி மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அதன் பின்னர் எடுக்கும் தீர்மானத்தை தான் வெளியிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இது இரண்டு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் முதலாவது சந்தர்ப்பம் அல்ல. வரலாற்றில் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மே மாதம் 27 முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதே வாரம் 28ஆம் திகதி முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் 29,30,31 ஆம் திகதி புனித நாட்கள். இந்த நாட்களில் தான் இறைச்சி வழங்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். எனினும் 30ஆம் தேதி போயா தினம் வரலாறு முழுவதும் போயா தினங்களில் சட்டத்திற்கு மதிப்பளித்து அதனை மேற்கொள்ளாது ஏனைய இரண்டு நாட்களிலும் தான் இந்த வழிபாட்டில் ஈடுபடுவார்கள். எனினும் இந்த வருடம் 27 ஆம் திகதி முதல் இரண்டாம் திகதி வரை இந்த வெசாக் வாரம் என்பதினால் எவ்வாறு இந்த வழிபாடுகளில் ஈடுபடுவது? அவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

Related Articles