தபால் திணைக்களத்திற்கான 326 மூன்றாம் நிலை தபால் சேவை அதிகாரிகள் நியமனம்
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டித் தேர்வில் சித்தியடைந்த 326 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (28) தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்த ஆகியோர் தலைமை தாங்கினர்.
தபால் மா அதிபர் ருவன் சத்துகுமார,
தலைமையகம் மற்றும்
மாகாண பிரதி தபால் மா அதிபர்கள்,
செயல் மற்றும் பணியாளர் அதிகாரிகள்,
தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள்,
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


