இராணுவத்தின் 25வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதற்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோவுடன் இணைந்து 07 ஜனவரி 2025 அன்று அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்து போர் வீரர்களைப் பார்வையிட்டார்.
வருகை தந்த பிரதம அதிதியின் வாகன தொடரணிக்கு மிஹிந்து செத் மெதுர நுழைவாயிலில் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய போர் வீரரால் வரவேற்கப்பட்டார்.
ஆரம்பத்தில்,இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் ஆரோக்கிய நல விடுதிக்கு வருகை தந்து போர் வீரர்களின் நலம் விசாரித்தார். விஜயத்தின் போது விஜயபாகு காலாட் படையணியின் சார்ஜன் எச்எம்டபிள்யூபீ கலகெதர ஆர்எஸ்பீ அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு கைப்பணி இராணுவ தளபதியிடம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், தளபதி அவர்கள் தேநீர் விருந்துபசாரத்தின் போது அனைத்து நிலையினருடன் உரையாடினார், அதைத் தொடர்ந்து மிஹிந்து செத் மெதுர தொடர்பான சிறப்பு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பின்னர், இராணுவத் தளபதி குழு படம் எடுத்து கொண்டதுடன் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.