இஸ்ரேல் நாட்டிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இஸ்ரேல் நாட்டில் இலங்கையர்களுக்கு வீட்டுப் பராமரிப்பாளர் துறையில் பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதற்கமைய, அதற்கான முழு அதிகாரமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கே உள்ளது.
எனவே, இஸ்ரேலில் பராமரிப்பாளர் தொழிலைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு தரப்பினருக்கும் பணம் செலுத்தாதீர்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டடுள்ளது.