பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை
  • :

கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Articles