போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நெடுந்தீவுக்கான மேற்கொண்ட விஜயத்தின் போது, குறிகட்டுவான் இறங்கு துறையில் பாரிய சிக்கல்கள் இருப்பதனை அவதானித்தார்.
அதிக பயணிகள் நெரிசல் ஏற்படும் போது, நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பற்றாக்குறை, பயணிகள் நிற்கும் இடங்களின் குறைபாடுகள், படகு நிறுத்துமிட வசதிகளின் குறைபாடு, மோசமான சுகாதார வசதிகள், போதுமான காத்திருப்பு வசதிகள் இல்லாதது, சில மோசமான வசதிகள் மற்றும் படகுத்துறையின் சேதமடைந்த நிலை ஆகியவற்றை அமைச்சர் அவதானித்தார். மேலும், பண்டப் போக்குவரத்தும் இந்தத் துறைமுகத்தில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்கிறது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, அனைத்துப் பிரச்சினைகளையும் விரிவாக ஆராய்ந்து, பொருத்தமான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊடகப் பிரிவு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு.