கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்தவும்

கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்தவும்
  • :

கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்தவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலைகள் தொடர்பாக பெறப்படும் புகார்களை துல்லியமாகவும் திறமையாகவும் விசாரிக்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவுக்கு, தேவையான அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பி அதனை வலுப்படுத்துமாறும், தற்போதுள்ள விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவிறுத்தினார்.

 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தலைவராக நேற்று (06) பாராளுமன்றத்தின் குழு அறை இல. 01 இல் நடைபெற்ற கூட்டத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

Related Articles