அவசர அனர்த்த நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மீமுரே-ஹுன்னஸ்கிரிய சாலை நேற்று (06) முதல் இலகுரக வாகனங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.
புதுப்பித்தல் நடவடிக்கைகளின் போது கைகாவல பாலம் ஆபத்தான நிலையில் இருந்ததால், வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், தற்போது புதுப்பித்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ள முடியும், ஆனால் கனரக வாகனங்கள் பயணிப்பது இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மலும் சுட்டிக்காட்டினார்.


