பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தென்னை உற்பத்திச் சகையினால் நடைமுறைப்படுத்தப்படும் கப்ருகட சவியக் - வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் - அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் நிகழ்வு நாளை (30) ஆரம்பமாகும்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம், யூரல் கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியன ஒன்றிணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
ரஷ்யாவின் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற 27,500 மெற்றிக் தொன் எம் ஓ பி உரம் மற்றும் ஏப்பாவெல ரொக் பொஸ்பேட் , யூரியா கலந்த தென்னை உற்பத்திக்கான விசேட ஏஎம்பி தென்னை உரம் 56,700 மெற்றிக் தொன்னை தயாரிக்கும் அரச உரக் கம்பனி தற்போது இதற்காக செயற்பட்டு வருகிறது.
இந்த உரத்தை மானிய விலையில் வழங்குதல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றுக்காக அவசியமான நடவடிக்கைகளை தென்னை உற்பத்திச் சபை மற்றும் அரச உரக் கம்பனி ஆகியன மேற்கொண்டு வருகின்றன.
சந்தையில் 9000 ரூபாய்க்கு காணப்படும் 50 கிலோ உரப் பொதி ஒன்றை 4,000 ரூபாய் மானிய விலையில் வழங்கும் செயற்பாடு இதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அதன்படி இம்மாதம் 30ஆம் திகதி வெள்ளவாய பிரதேச செயலாளர் பிரிவில் தென்னை உற்பத்திச் சபையின் ஹந்தபானகல தென்னை நாற்று மேடையில் இடம் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு ஐந்து ஏக்கருக்கு குறைவாக கால் ஏக்கரை விட அதிக தென்னை உற்பத்தி நிலத்தில் 350000 ஏக்கர் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் அதிக தென்னை உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
5600 மில்லியன் ரூபாய் முதலீடு ஒன்றின் கீழ் இந்த தென்னை உர மானிய திட்டம் செயற்படுத்தப்படுவதுடன், இந்த தென்னை உரத்தை பயன்படுத்தும் போது நாட்டின் தென்னை தேங்காய்க்கான தேவையைப் பூரணப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாகவும், இந்த உர விநியோகத்தினால் ஒன்றுரை வருடங்களுக்குப் பிறகு அறுவடை அதிகரிக்கும் எனும் நோக்கத்தை அடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தென்னை உற்பத்தியாளர்கள் இந்த மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தென்னை உற்பத்திச் சபையின் ஊடாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் அதற்காக அந்த விண்ணப்பப் பத்திரத்தை தென்னை உற்பத்திச் சபையின் உத்தியோகபூர்வ https://cocnutsrilanka.lk/ இணையத் தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.