கடந்த 9 மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,000 ஐ தாண்டியுள்ளது

கடந்த 9 மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,000 ஐ தாண்டியுள்ளது
  • :

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் கடந்த 9 மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆகும்.

செப்டம்பர் மாதம் மாத்திரம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் செப்டம்பர் மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகக் காணப்படுகிறது.

இதேவேளை, அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளாக முறையே இந்தியா, இங்கிலாந்து, சீனா, ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் எனவும் பதிவாகியுள்ளன.

Related Articles