இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB), ஆசிய அபிவிருத்தி வாங்கி (ADB) என்பவற்றுடன் இணைந்து 2025 - 2029 காலப்பகுதிக்காக தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தை (NEDP) தயாரிப்பதற்காக துறை சார்ந்தவர்களின் ஆலோசனை தொடர் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் ஏற்றுமதி போட்டித் தன்மையை வலுப்படுத்துவதற்கு மற்றும் நிலைபெறான பொருளாதார அபிவிருத்தி ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்ற வழிகளை கண்டறிதல் இதன் அடிப்படையாகும்.
இந்த கலந்துரையாடல் அமர்வொன்று இன்று (02) ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் இடம்பெற்றது.
அரச மற்றும் தனியார் துறைகளில் நிறுவனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.


