"கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்" - ஜனாதிபதி ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க
இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் என்ற வகையில், இந்த உலகில் உயர்ந்த மனித நேயம் மிக்க இடமாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த உயர்ந்த மனித நேயத்தை அனைத்து மக்களும் சமமாக உள்வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். சுதந்திரத்திற்கான போராட்டம் இந்த பரந்த நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, சுதந்திரக் கனவை ஒன்றாகப் காண்போம், அந்தக் கனவை ஒன்றாக நனவாக்கிகொள்வோம்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு