“ரகிமு பரிசரய - தபமு பிரிசுதுவ (சூழலைப் பாதுகாப்போம் - சுத்தமாக வைத்திருப்போம்)” எனும் தொனிப்பொருளின் கீழ் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னிட்டு கட்டான பிரதேச செயலாளர் சுமுது அத்துகோரளவின் வழிகாட்டலின் கீழ் கட்டான திமிரிகஸ்ர்ரகட்டுவ ஹைடெக் முன்பள்ளியில் முன்பிள்ளைப் பருவக் குழந்தைகளுக்கு கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் (08) இடம்பெற்றது.
வளமானவற்றை மிகவும் நிரந்தரமானதாக, வசதியானதாக பழக்கப்படுத்திக் கொள்ளக்கூடிய முன் பிள்ளைப் பருவக் குழந்தைகள் கழிவுப் பொருட்களை முறையாக அகற்றுதல் மற்றும் சூழலை நேசிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.