கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பித் திருட்டை நிறுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உதவி - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மின் கம்பிகளை வெட்டுதல் தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை (STF) சுற்றுலா ரோந்து சேவையின் அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்கம்பிகளை வெட்டிச் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்த திருடர்களுக்கு தண்டனை வழங்கினாலும் எவ்வளவு புதுப்பித்தாலும் மீண்டும் மீண்டும் இந்த செயற்பாடு இடம்பெறுவதுடன், இரவு காலங்களில் இடம்பெறும் இந்த திருட்டினால் வீதியைப் பயன்படுத்துபவர்களும் பயப்படுவதாக தெரிய வருகின்றது.
இதற்கான இந்த யோசனை இரவு நேரங்களில் சுற்றுலா ரோந்து சேவையை முறையாக மேற்கொள்வது தீர்வாக அமையும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வாறே இந்த வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் அவற்றை உடனடியாக நீக்குவதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு