கேகாலை மாவட்ட அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள்

கேகாலை மாவட்ட அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள்
  • :
 
கேகாலை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை இந்த வருடத்தில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனுடன் சம்பந்தப்பட்ட திட்டங்களை தயாரித்து வருவதாகவும், கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 அதன்படி கேகாலை மாவட்ட திட்டமிடல் பிரிவின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்களுடன் பின்னவெல கித்துள்கல சுற்றுலா வலய அபிவிருத்தி வேலைத் திட்டம் ஊடாக அரநாயக்க மற்றும் புலத்கொகுபிடிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சம்பந்தப்படுத்தி உடுவ தோத்தல் வீதி அபிவிருத்தி திட்டம் அசிப்பின் கால்வாய் தெய்யன்வல வீதி அபிவிருத்தி போன்றவற்றை ஒருங்கிணைந்து கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 
அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஒருங்கிணைந்த அபிவிருத்தி அணுகு முறை ஊடாக இலங்கையின் கிராமியப் பிரதேசங்களில் வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
அரநாயக்க கங்துண மெதகம வலயத்தில் தோத்தல் ஓயா நுழைவாயில் அண்மித்ததில் இருந்து 50 ஏக்கர் வரையான வீதி அபிவிருத்தி முதற்கட்டத்திற்காக 4.1 மில்லியன் ரூபாவும், அரநாயக்க கங்துண மெதகம வலயத்தில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக மலசல கூட வசதிகளை வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவும், கேகாலி ஆட்டுக்கட கால்நடை உற்பத்தி கிராம திட்டத்திற்கு 2.9 மில்லியன் ரூபா மற்றும் கேகாலை கங்துண - வடக்கு தெற்கு, பெலிகுள்வான ஏற்றுமதிப் பயிர் உற்பத்திக் கிராமத்திற்காக 5.3 மில்லியன் ரூபாய் மற்றும் ரங்வல வெற்றிலை உற்பத்திக் கிராமிய திட்டத்திற்காக 2.7 மில்லியன் ரூபாய் மற்றும் அரநாயக்க செலவ மேற்கு ரக ல மகாஅமுண திருத்தப் பணிகளுக்காக 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles