கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் யாழ் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் யாழ் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
  • :

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவை தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் (12.08.2025) பி. ப. 4.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர், வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், சனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா ஞ்சலி, யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. தெ. கபிலன் ஆகியோரால் முன்னேடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களின் விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

Related Articles