கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்கின்ற "புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025"தொடர்பான கலந்துரையாடல் மார்ச் 12ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் ஹபுதன்த்ரி, கங்காராம விகாரையின் தலைமைத் தேரர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி அவர்கள், மற்றும் கலாநிதி பல்லேகம ரத்தனசார தேரர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு H S S துய்யகொந்தா அவர்கள்,
புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு W C சேனாதீர அவர்கள்,
பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.