கொழும்பு குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த, புதிய மேலதிக குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்

கொழும்பு குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த, புதிய மேலதிக குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்
  • :
கொழும்பு குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பிரதம நீதியரசர், நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புதிய மேலதிக குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

 புதிய மேலதிக குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று (13) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2006 ஆம் ஆண்டு 54 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்றங்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 5B இன் அடிப்படையில் குடியியல் அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்காக நிறுவப்பட்ட புதிய நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக, மேல் நீதிமன்ற நீதிபதி ஹசித சமன் பொன்னம்பெரும மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகர ஆகியோரை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

நீதிமன்ற செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நீதிமன்ற அமைப்பு மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதம நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, இலஞ்ச வழக்குகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசரின் அறிவுறுத்தலின் பேரில் தனியான நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles