உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் MSC MARIELLA, நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியாவுக்குச் சொந்தமான MSC MARIELLA என்ற கப்பல் 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது. 240,737 டொன் எடையுள்ள கொள்கலன்களை சுமந்து செல்லக்கூடிய இந்த மிகப்பெரிய கப்பல் 2023 இல் கட்டப்பட்டது.
இந்தக் கப்பல்களின் ஊடாக கிழக்கு கொள்கலன் முனையத்தில் 1,600 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக பணிப்பாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்தார்.
MSC MARIELLA கப்பலின் வருகை இலங்கை கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என்றும், இது சர்வதேச கடல்சார் துறையில் இலங்கையின் நற்பெயரை மேலும் உயர்த்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.