மக்களுக்கு சிநேக பூர்வமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்பேன் - புதிய மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம்

மக்களுக்கு சிநேக பூர்வமான சேவையை வழங்குவதற்கு  அர்ப்பணிப்பேன் - புதிய மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம்
  • :

மக்களுக்கு மிகவும் உயர்தரத்திலான சேவையை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய நிருவாகம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இலஞ்சம் ஊழல் இன்றி அரசாங்கத்தின் சுபிட்சமான பயணத்தில் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கமல் அமரசிங்க தமது பதவியை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இருண்டு காணப்பட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் (RMV) ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் கணக்காய்வுக்கு பொறுப்புக் கூறும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கும் என்றும் கோக் குழுவின் முன்னாள் தோன்றாமல் இருப்பதற்கு ஏற்றவாறு வெளிப்படைத் தன்மையாக பணியாற்றும் என்றும் பிரதி அமைச்சர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசு கொள்கைகளுக்கு இணங்க மக்கள் நலன் பேணும், முன்னுதாரணம் மிக்க சேவையை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கும் உயர்தரத்திலான சேவையை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், பரவலான, வினைத்திறனான, சிநேகபூர்வமான சேவைக்காக தான் உட்பட அனைத்து ஊழியர் குழுவும் அர்ப்பணிப்போம் என்றும் மோட்டார் வாகன போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கபில் அபரசிங்க இங்கு விபரித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]