"மறுமலர்ச்சி நகரம்" உள்ளூராட்சி வாரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி வாரத்தில், செப்டம்பர் 15 ஆம் திகதி நடமாடும் சேவை நாளாகவும், செப்டம்பர் 16 ஆம் திகதி சுற்றுச்சூழல் மற்றும் மர நடுகை நாளாகவும், செப்டம்பர் 17 ஆம் திகதி சுகாதார நாளாகவும், செப்டம்பர் 18 ஆம் திகதி வருமான மேம்பாட்டு நாளாகவும், செப்டம்பர் 19 ஆம் திகதி இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு நாளாகவும், செப்டம்பர் 20 ஆம் திகதி பொது பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு நாளாகவும், செப்டம்பர் 21 ஆம் திகதி சான்றிதழ் வழங்கல் மற்றும் நிறைவு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


