70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் 500,000 ரூபாய் பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிகாரசபையினரால் நேற்று (08) நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் குறித்த நிறுவனத்திற்கு எதிராக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.


