நாட்டில் சுகாதார சேவைகளின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப, நிதி மற்றும் பிற ஆதரவை வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடல்

நாட்டில் சுகாதார சேவைகளின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப, நிதி மற்றும் பிற ஆதரவை வழங்குவது சம்பந்தமாக  கலந்துரையாடல்
  • :
SWA என்பது அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை என்ற நோக்கத்துடன் இயங்கும் (Sanitation and Water for All - SWA) ஒரு உலகளாவிய கூட்டமைப்பாகும், நாட்டில் சுகாதார சேவைகளின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப, நிதி மற்றும் பிற ஆதரவை வழங்குவது சம்பந்தமாக அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
 
ஐக்கிய நாடுகள் சபையால் (UN) நடத்தப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை (Sanitation and Water for All - SWA) உலகளாவிய கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முயத்வ சீதாலி, (SWA Chief Executive Officer, Muyatwa Sitali) இலங்கைக்கான யுனிசெஃப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham, UNICEF Representative for Sri Lanka) பிற பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு வினர் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினர்
நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல், மற்றும் வைத்தியசாலைகளில் சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற போன்ற விடயங்களை மையபடுத்தி கலந்துரையாடல் நடைபெற்றது.
சுகாதாரம், தூய்மை மற்றும் சுத்தமான குடிநீர் சம்பந்தமான துறைகளின் வளர்ச்சிக்கு இந்த அமைப்பின் பங்களிப்பை வினைத்திறனாக பயன்படுத்துவது பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது.
 
2010-ஆம் ஆண்டு முதல் இலங்கை இந்த அமைப்புடன் நட்புறவுடன் பணியாற்றி வருவதாகவும், நாட்டின் சுகாதார சேவைக்கு தொழில்நுட்ப, நிதி மற்றும் பிற ஒத்துழைப்புகளை வழங்கத் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் பிரதிநிதி தெரிவித்தார்.
இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், இந்தியா மற்றும் கானா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த அமைப்பு தேவையான ஆதரவை வழங்குகிறது என்றும், மேலும் இது உலகெங்கிலும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்கங்கள், தனியார் துறை, ஐ.நா. பிரதிநிதிபடுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைத்து செயல்படுகிறது என்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதிலும், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதிலும், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுகாதாரத்தைப் பேணுவதிலும் ஒத்துழைப்பு நல்கிய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 6-வது வளர்ச்சி இலக்கான (SDG 6) "அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்" என்பதை அடைவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
 
2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் நிலையான இலக்கை நோக்கி இலங்கை முன்னேறி வருகிறது. மேலும், 2010-ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகிக்கின்றது.
இந்நிகழ்ச்சியில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் (பொறியியல்) சலிந்த பண்டார, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுமல் நந்தசேன, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்குரிய அலுவலகத்தின் திட்ட அலுவலர் (நீர், சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம்) நிலுஷா பத்தபெண்டி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Related Articles