நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை
  • :

2025 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

20025 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மிமீக்கும் அதிமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு  நேராக சூரியன் இருக்கும். இதன் காரணமாக, இன்று (14) பிற்பகல் 12:10 மணிக்கு டெல்ப்ட, புனரின், ஆனையிறவு மற்றும் சுண்டிக்குளம்
ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

Related Articles